புறக்கணிப்பின் வலிகளும் உதிரும் ஞாபகங்களும்
மணிமாறன் ••• எனது புதிய நாவல் நிமித்தம் குறித்து தமுஎகச அமைப்பை சார்ந்த இலக்கிய விமர்சகரான விருதுநகர் மணிமாறன் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரையிது. ••• திருமணம், குழந்தைபேறு, சொந்தவீடு இவையே எளிய மனிதர்களின் உயர்ந்த லட்சியமாக இன்றுவரையிலும் பார்க்கப்படுகிறது. இவற்றை அடைவதற்கான வழியொன்றும் எல்லோருக்கும் எளிதாக அமைந்து விடுவதில்லை. முயற்சிகள், தோல்விகள், பரிகசிப்புகள் எனத் தினமும் கடந்து வர வேண்டியிருக்கிறது. அதிலும், உரிய காலத்தில் நிகழாத நாற்பது வயதைக் கடந்த பிறகும் கூடத் திருமணம் கைகூடாமல் இருப்பதற்கு எத்தனையோ …