இலக்கிய முகாம்

இலக்கிய வாசிப்பினை பரவலாக்கவும், உலக அளவிலான இலக்கியப்போக்குகள் , தமிழின் இன்றைய எழுத்துலகம் மற்றும் புதிய படைப்பாளிகள் குறித்து கவனம் கொள்ளவும் இந்த ஆண்டு ஐந்து இலக்கிய முகாம்களை நடத்த திட்டமிட்டிருக்கிறேன் . இதன் முதல்முகாம் கதைகள் பேசுவோம், சென்னையில் நடைபெறுகிறது, இது சிறுகதைகளுக்கானது, மார்ச் 23 ஞாயிறு அன்று நடைபெறுகிறது, அடுத்த முகாம் மே மாதம் மதுரையில் நடைபெற்ற உள்ளது ,அது நாவலுக்கான முகாம், மூன்றாவது முகாம் ஆகஸ்ட் மாதம் கவிதைகள் குறித்து ஏலகிரியில் நடைபெற …

இலக்கிய முகாம் Read More »

மில்லேயின் ஒவியங்கள்

பிரெஞ்சு ஒவியர் பிரான்ஸுவா மில்லே (Jean-François Millet) ஒவியங்களை நியூயார்க்கில் பார்த்திருக்கிறேன், அவரை எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கியக் காரணம் “no teacher other than nature” என்ற அவரது ஒரு வாசகம், அந்த வரியை எனது நாட்குறிப்பின் முதல்பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறேன், மில்லே விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர், பாரீஸில் தங்கி ஒவியம் கற்றுக் கொண்டிருக்கிறார், இவரது ஒவியங்களை ஹென்றி ரூசோ மிகவும் பாராட்டியிருக்கிறார், கிராமப்புற விவசாய வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர்களில் மில்லே முக்கியமானவர், இவரது ஒவியங்களில் வான்கோவின் பாதிப்புகளைக் …

மில்லேயின் ஒவியங்கள் Read More »

நெஞ்சில் இட்ட கோலம்

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை, என்றும் அது கலைவதில்லை, எண்ணங்களும் மறைவதில்லை என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் என் நினைவில் கொப்பளிக்கிறது, பாலுமகேந்திரா என்ற மகத்தான கலைஞனைப் பற்றியே கடந்த ஒருவாரமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், முந்திய நாளின் இரவில் யாத்ரா படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்கள் கலங்கிவிட்டது, என்னவொரு அற்புதமான ஒளிப்பதிவு, படமாக்கம், இசை, மலையாளத்தில் வெளியான அப்படம் இன்றளவும் புத்துணர்வுடனே இருக்கிறது. பாலுமகேந்திரா அவர்களுடன் பழகிய நினைவுகள் பொக்கிஷமானவை, இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு …

நெஞ்சில் இட்ட கோலம் Read More »

ஹோமியோபதியின் மகத்துவம்

நேற்று டாக்டர் விகடன் இதழுக்காக நேர்காணல் செய்ய வந்திருந்தார்கள், அப்போது எனது அண்ணன் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதையும் அவரது மருத்துவசெயல்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த போது ஏன் சார் இந்த அனுபவங்களைப் பற்றி எழுதவேயில்லை எனப் பத்திரிக்கையாளர் ஆதங்கத்துடன் கேட்டார், அதற்கென்ன எழுதிவிடுகிறேன் என்று சொன்னேன் நேற்று இரவு யோசித்த போது தோன்றியது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் எவ்வளவோ பயணங்கள் செய்திருக்கிறேன், கண்டபடி ஊர் சுற்றியிருக்கிறேன், எது எனது பயணத்தின் உறுதுணை என்றால் ஹோமியோபதி …

ஹோமியோபதியின் மகத்துவம் Read More »

சொல்வனம் சிறப்பிதழ்

சொல்வனம் இணையத்தில் வெளிவரும் தரமான இணையஇதழ், தேர்ந்த இலக்கியப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், கலை மற்றும் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது, நான் தொடர்ந்து சொல்வனம் இதழை வாசித்து வருகிறேன், தற்போது சொல்வனம் தனது நூறாவது இதழாக அசோகமித்திரன் சிறப்பிதழை பதிவேற்றம் செய்துள்ளது, நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மை சாதனையாளரான அசோகமித்திரனின் படைப்புகளைக் கொண்டாடும் இந்த முயற்சி மிகவும் முக்கியமான இலக்கியப் பங்களிப்பாகும், இந்த இதழில் அசோகமித்திரனின் நேர்காணல், கட்டுரைகள். அவரது படைப்புகள் குறித்த விமர்சனக் கட்டுரைகள், …

சொல்வனம் சிறப்பிதழ் Read More »

தோக்கியோ சுவடுகள் 4

ஷின்கான்ஷேன் எனப்படும் அதிவேக ரயிலில் ஹிரோஷிமா போவது என முடிவு செய்திருந்தோம், 1964இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புல்லட் ரயில் ஒரு மணிக்கு சுமார் 240 – 320 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது, 900 கிலோமீட்டர் தூரமுள்ள ஹிரோஷிமாவை அந்த ரயில் மூன்றரை மணி நேரத்தில் சென்றடைகிறது ஷினகவா ரயில் நிலையத்திலிருந்து காலை ஏழு மணிக்கு இந்த ரயிலைப்பிடிக்க வேண்டும், ஷின்கான்ஷேன் ரயிலில் பயணிப்பது அலாதியான அனுபவம், இதற்காக அதிகாலை குளிரில் வீட்டிலிருந்து கிளம்பி வாடகை …

தோக்கியோ சுவடுகள் 4 Read More »

கதைகள் பேசுவோம்

புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன ஆனால் தீவிரமாகப் படிப்பவர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள், ஒத்த ரசனையுடையவர்கள், இலக்கியத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளவிரும்புகிறவர்கள், படைப்பிலக்கியத்தில் புதிதாக ஈடுபட விரும்புகிறவர்கள் இவர்கள் ஒன்றிணைந்து உரையாடவும் விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொதுவெளி இல்லாமல் இருக்கிறது என நண்பர்கள் பலரும் என்னிடம் ஆதங்கப்படுகிறார்கள், நான் எழுத துவங்கிய காலத்தில் இது போன்ற சந்திப்புகள், இலக்கியக்கூட்டங்கள் நிறைய நடைபெற்றன, முக்கிய எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள், குற்றாலம் கவிதைப்பட்டறை இதன் சிறந்த எடுத்துக்காட்டு இலக்கியப்பகிர்விற்கான பொதுவெளியை உருவாக்கும் …

கதைகள் பேசுவோம் Read More »

நோய்மையை விசாரிக்கும் துயில்

ந.முருகேசபாண்டியன் மதங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு காலந்தோறும் தொடர்கின்றது. உடல்ரீதியிலும் மனரீதியிலும் வாடி வதங்கிடும் மனிதனுக்கு ஆறுதல் அளிக்க கடவுள் தேவைப்படுகிறார். உடல்கள் அனுபவிக்கும் இன்பங்கள் கீழானவை என்ற கருத்தை வலியுறுத்துகிறது மதம். இந்நிலையில் ஏதோவொரு காரணத்தால் உடல் நலிவடைந்து நோய்க்குள்ளாகும்போது, கடவுள் தந்த தண்டனையாகக் கருதுவது வழக்கினில் உள்ளது. தங்கள் நோயைப் போக்க கடவுளிடம் மன்றாடுவது உலகமெங்கும் நடைபெறுகிறது. இத்தகைய துயில்தரு மாதா ஆலயம் உள்ள தெக்கோடு கிராமத்தில் ஆனி மாதம் திருவிழா …

நோய்மையை விசாரிக்கும் துயில் Read More »

ஈரோட்டில்

கல்லூரி நிகழ்வு ஒன்றிற்காக ஈரோடு வருகை தர இருக்கிறேன், 18 மற்றும் 19ம் தேதிகளில் ஈரோட்டில் இருப்பேன், சந்திக்க விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன் தொடர்பு கொள்வதற்கு கிருஷ்ணன் : 9865916970