ராபர்ட் ருவாக்

ஹெமிங்வேயை நினைவு வைத்துக் கொண்டிருக்கும் பலரும் ராபர்ட் ருவாக்கை (Robert Ruark) நினைவு வைத்திருப்பதில்லை. அமெரிக்க இலக்கியத்தில் ஹெமிங்வேக்கு நிகரான எழுத்தாளர் ருவாக். ஹெமிங்வேயின் வாழ்க்கையும் ருவாக்கின் வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கிறது. இருவருமே பத்திரிக்கையாளர்களாகத் துவங்கி எழுத்தாளர் ஆனவர்கள்.  இருவருக்குமே சாகசப் பயணங்களில் வேட்டையாடுதலில் காளைச் சண்டையில் அதிக ஈடுபாடு இருக்கிறது. ஹெமிங்வேயோடு ருவாக் சேர்ந்தே பயணம் செய்திருக்கிறார். ஒன்றாகவே வேட்டையாடியிருக்கிறார்கள். ஆப்பிரிக்க பயணம் போயிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்க இலக்கியத்தின்  பிதாமகனை போல …

ராபர்ட் ருவாக் Read More »

அன்பு தியோ.

  எனக்கு தியோவைப் பிடிக்கும். அவன் ஒவியர் வான்கோவின் தம்பி. நான்கு வயது இளையவன். தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நிஜவாழ்வில் இருந்தால் எப்படியிருந்திருப்பான் என்பதற்கு தியோவை உதாரணமாகச் சொல்லலாம். தஸ்தாயெவ்ஸ்கியின் மிஷ்கின் எளிய மனிதன். ஆனால் அன்பும் கருணையும் உருவானவன். அறிந்த அறியாத மனிதர்களுக்காக தன்னிடமிருப்பதை முழுமையாக பகிர்ந்து கொள்பவன். அடுத்தவரின் துயரங்களுக்காக மனம் வருந்துபவன். அவனிடம் வாழ்க்கை குறித்த புகார்கள் எதுவுமில்லை. அதே நேரம் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்பவர்களுக்காக  அவன் கைகொடுத்து உதவுகிறான். …

அன்பு தியோ. Read More »

குறும்படங்கள் பத்து

இணையத்தில் சமீபத்தில் பார்த்த சில குறும்படங்கள். 1)      Not an every day story https://www.youtube.com/watch?v=QoA9GRJbIc0 2)      Second Wind https://vimeo.com/10019015 3)      Melancholy Soldier (Short Film Version) https://www.youtube.com/watch?v=6cfgXuCEwFs 4)      the big shave https://www.youtube.com/watch?v=QrCaJ-8Q1Y0 5)      Replay short film https://www.youtube.com/watch?v=qKKGk1HZa6A 6)      Lavatory – Lovestory 2007 https://www.youtube.com/watch?v=_cHTt8RJJWQ 7)      Knal – Bang – short film https://www.youtube.com/watch?v=zaG7_QyQQhY 8)      Life Circle- Sri Lanka Short Film https://www.metacafe.com/watch/2599829/life_circle_sri_lanka_short_film/ …

குறும்படங்கள் பத்து Read More »

காட்சி பதிவுகள்.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல்கள் மற்றும் கலைஇலக்கிய உரைகளின் காட்சிப்பதிவுகள் இவை. Vladimir Nabokov discusses “Lolita” part 1 of 2 https://www.youtube.com/watch?v=Ldpj_5JNFoA Vladimir Nabokov discusses “Lolita” part 2 https://www.youtube.com/watch?v=0-wcB4RPasE Interview with Philip Roth (Part 1) https://www.youtube.com/watch?v=5NmXqpdupTk Interview with John Updike (1995), 1 of 2 https://www.youtube.com/watch?v=LlD6DmWBU4o William Faulkner at the University of Virginia https://www.youtube.com/watch?v=GswCn8KkP88 Jacques Derrida On Deconstruction And Christianity …

காட்சி பதிவுகள். Read More »

ஆங்கில மொழியாக்கம்

  எனது சிறுகதையான பிழைதிருத்துபவனின் மனைவி Muse India  (Issue 30, Mar-Apr 2010) என்ற ஆங்கிலத்தில் வெளியாகும் இணைய இதழில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஆங்கில பேராசிரியர் சித்ரா. இந்த இதழை கவிஞர் பிரம்மராஜன் சிறப்பு எடிட்டராக இருந்து தயாரித்திருக்கிறார். இது போல எனது சிறுகதைகள், கட்டுரைகள் அல்லது நாவலை  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க  விருப்பம் உள்ள வாசகர்கள் , ஆர்வலர்கள் முன்வந்தால் அதை தனித்த நூலாகவோ அல்லது எனது இணையதளத்திலோ வெளியிட உதவியாக …

ஆங்கில மொழியாக்கம் Read More »

பெசோவின் புத்தகம்

தற்செயலாகவே அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். பத்து பக்கங்கள் படிப்பதற்கு நான் படித்து கொண்டிருப்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்து என்பதை உணர முடிந்தது. அப்படி தான் Fernando Pessoa`s The Book of Disquiet  புத்தகத்தை கண்டுபிடித்தேன். பெசோவின் எழுத்து தனித்துவமானது. ஒருவகையில் அது காப்காவை போன்றது. வாழ்க்கையும் காப்காவின் வாழ்வையே அதிகம் ஒத்திருக்கிறது. பெசோவின் புத்தகம் அவரது மறைவிற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. தன் வாழ்நாளில் அதிகம் கவனிக்கபடாத கவிஞராக …

பெசோவின் புத்தகம் Read More »

காந்தம்

 சென்ற வாரத்தில் ஒருநாள் முன்பாக அசோக்பில்லர் சாலையில் ஒரு ஆளைக் கண்டேன். வயது ஐம்பதை கடந்திருக்கும். மெலிந்து கண்கள் ஒடுங்கி போனவளாகயிருந்தார். முதுகில் ஒரு பாலிதீன் பை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு சாலையோரம் எதையோ தேடுவது போல சுற்றிக் கொண்டேயிருந்தார் அப்போது தான் கவனித்தேன். அவரது கையில் இருந்த குச்சி முனையில் ஒரு வட்டு போலிருந்தது. அந்த வட்டில் தரையில் கிடந்த ஆணிகள், துருப்பிடித்த சாவிகள், நட்டுகள் மற்றும் சிறு இரும்பு …

காந்தம் Read More »

சம்பத்தின் இடைவெளி

பாலின்பத்தின் உச்சநிலையை பிரெஞ்சில் petit mort    என்கிறார்கள். அதன் பொருள்    mini-deaths  அதாவது நிமிச நேர மரணம். சாவு குறித்த பயத்திலிருந்தே பாலின்ப வேட்கை உருவாகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். பாலுறவும் சாவும் ஒன்றோடு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டது. தன்னை விருத்தி செய்து கொள்வதற்காகவே பாலின்பத்தை நாடுகிறான் மனிதன்.  அது சாவிலிருந்து தாண்டிச் செல்ல முனையும் எத்தனிப்பே.  பாலுறவின் ஈடுபாடும் சலிப்பும் சாவு குறித்த அடிமனதின் எண்ணங்களின் வழியே தான் தூண்டப்படுகிறது என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்.  இந்திய புராணீகத்தில் …

சம்பத்தின் இடைவெளி Read More »

திரைப்பட விழா

  அமெரிக்காவின் புகழ்பெற்ற  Beloit International Film Festival , 2011.வில் இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் குறும்படங்கள் குறித்த  தனி பிரிவு உள்ளது, இதில் போட்டி மற்றும் தனி திரையிடல் இரண்டும் உள்ளது, ஆகவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியான படங்களை அனுப்பலாம், தமிழ் குறும்படங்கள். டாகுமெண்டரி.  அனிமேஷன். மற்றும் முழுநீளப் படங்களை இந்த போட்டிக்கு அனுப்பி வைக்கலாம், மே 15 க்குள் அனுப்பபடும் விண்ணப்பங்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது, மேலதிக விபரங்களுக்கு https://www.beloitfilmfest.com/ விண்ணப்பங்களுக்கு …

திரைப்பட விழா Read More »