நடந்து தீராத கால்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார். எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரை என் மீது அதிக அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். புகழ் பெற்ற உலக இலக்கியப் புத்தகங்களை தந்து என்னைப் படிக்க வைத்து, என் சிறுகதைகள் வெளியான நாட்களில் அதைப் பற்றி விவாதித்து எப்போதும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவரைச் …