கூர்க்காவின் பகல்
விழித்துக் கொண்டிருந்த எத்தனையோ பின்னிரவுகளில் அந்த நடைச்சப்தத்தை கேட்டிருக்கிறேன். யாருமற்ற தெருவில் தனியே விசில் அடித்தபடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் நாற்பது வயதை கடந்த கூர்க்காவை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். என்ன வேலையிது. எதற்காக இந்த மனிதன் தெருத்தெருவாக இரவில் சுற்றியலைகிறான் என்று புரியாமலும் கூட இருக்கும். ஒரு நாள் நேரத்திற்கு உறங்காமல் போனால் அடுத்தநாள் நமக்கு வேலை ஒடுவதில்லை. சதா எரிந்து விழுகிறோம். தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்கின்றவர்கள் கூட வருசம் முழுவதும் …