வேண்டுகோள்

எனது புத்தக வெளியீடுகள்,  இலக்கிய நிகழ்ச்சிகள், இணையதளம், பேருரைகளுக்காக எப்போதும் கைப்பணத்தை தான் செலவழித்து வருகிறேன்.

மிக அரிதாக சில நண்பர்கள் உதவி செய்வார்கள்.  அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடைக்கவில்லை.  அதைப் பற்றி நான் பெரிதாக  கவலைப்படவில்லை. எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன் என்பதால் எனது கஷ்டங்கள் நான் உருவாக்கிக் கொண்டவை என்று புரிந்தே இருக்கிறேன்.

தற்போது தேசாந்திரி Youtube சேனலில் சென்னையும் நானும் என்ற வீடியோத் தொடரைப் பகிர்ந்து வருகிறேன்.

12 பகுதிகளாக இதன் முதற்சீசன் திட்டமிடப்பட்டு வெளியாகி வருகிறது.

வீடியோத் தொடரை உருவாக்குவது எழுத்தைப் போல நான் ஒருவனாகச் செய்யும் முயற்சியில்லை.

என் மகன் ஹரி மற்றும் அவனது மூன்று நண்பர்கள் ஒன்றிணைந்து இத் தொடரைத் தயாரிக்கிறார்கள்.

இதற்கான படப்பிடிப்பு,  படத்தொகுப்பு, பதிவேற்றம் என நீண்ட நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகிறார்கள்.

வீடியோவிற்கான கேமிரா, லைட், மைக் மற்றும் இணையத்தொடர்பு, படப்பிடிப்பு நடக்கும் நாளிற்கான உணவு என சொந்தப் பணத்தை செலவு செய்கிறார்கள்.  Youtubeல் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் தொகை வெறும்  ஆயிரம் மட்டுமே.

சென்னையும் நானும் தொடரை நிறைய நண்பர்கள் பார்த்தும் பாராட்டியும் வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும் போது தான் அதைத் தொடர்ந்து செய்ய இயலும்.

இந்த தொடரைப் போலவே ரஷ்ய இலக்கியங்கள் குறித்தும், காந்தி குறித்தும், உலக சினிமா குறித்தும்,  எனது பயணங்கள் குறித்தும்  காணொளித் தொடர்களை உருவாக்க  நினைக்கிறார்கள்.

இது பொருளாதார உதவி இருந்தால் மட்டுமே  சாத்தியம்.

பெரிய வணிக நிறுவனங்களை அணுகி ஸ்பான்சர் கேட்பதை விடவும் என் வாசகர்கள், அயல்நாட்டு நண்பர்கள் தரும் சிறுதொகை மேலானது எனக் கருதுகிறேன்.

ஆகவே உங்களால் முடிந்த பொருளுதவியைச் செய்யுங்கள்.  இது அவர்களின் பணியை உத்வேகப்படுத்தும். நம்பிக்கையை உருவாக்கும்.

இது குறித்து சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

காணொளி :

video link
https://youtu.be/o-wqwCqZVjE

GPay or Phone Number: 9790765850

BANK DETAILS:
Name: R.hariprasad
Account number: 2605101012398
Ifsc code: CNRB0002605
Branch: K.k.Nagar, Chennai.
GPay or Phone Number: 9790765850

or

Contact

Desanthiri Pathippagam

D1,gangai apartment,110,,80feet road,saligramam Chennai-93

Phone 044-23644947   Mobile :  9600034659

Email :  desanthiripathippagam@gmail.com

Website :  https://www.desanthiri.com/

****

0Shares
0