admin

குறுங்கதை 51 மூன்று கிளிகள்

பறவைகளை யாராவது சகோதரிகள் என்று நினைப்பார்களா ?. வள்ளி ஆச்சி அப்படி நினைத்தாள். அன்றாடம் தன்னுடைய வீட்டின் பின் சுவரில் வந்தமரும் மூன்று கிளிகளை அவள் அக்கா தங்கைகள் என்றே கருதினாள். அக்கிளிகளும் சகோதரிகளைப் போலவே ஒன்றாக வாலசைத்தன. மூன்று கிளிகளைப் போலத் தான் ஆச்சியும் மூன்று பெண்களில் ஒருத்தியாகப் பிறந்தாள். ஆனால் அவளது மூத்த சகோதரிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். ஆச்சிக்கும் வயது எழுபதைக் கடந்தாகிவிட்டது. அரண்மனை போலப் பெரிய வீடு. வீட்டின் ஜன்னல்களை …

குறுங்கதை 51 மூன்று கிளிகள் Read More »

கதவும் கூரையும்

பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகச் சினிமாவை திசை திரும்ப வைத்தவர் இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா. அவரது இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரூஃப் (The Roof ) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். புதிதாகத் திருமணம் செய்து கொண்ட நடாலும் லூயிசாவும் குடியிருப்பதற்காக வீடு தேடுகிறார்கள். ரோமில் ஏழைகளுக்கு வீடு கிடைப்பது மிகவும் கடினம். தங்களுக்கென ஒரு வாழ்விடத்தை உருவாக்கிக் கொள்ள இளம் தம்பதிகள் மேற்கொள்ளும் போராட்டமே இப்படம். சிறிய …

கதவும் கூரையும் Read More »

காற்று,மணல், நட்சத்திரங்கள்.

காற்று, மணல்,நட்சத்திரங்கள் குறித்த சிறிய அறிமுக உரை பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் உலகின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று. அந்த நாவல் எழுதுவதற்கான ஆதார அனுபவங்களை விவரிக்கிறது காற்று, மணல், நட்சத்திரங்கள். இதில் விமானியான எக்சுபெரி தனது  பறக்கும் அனுபவத்தை மிக அழகாக விவரித்திருக்கிறார். . இந்த நூலை தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் வெ. ஸ்ரீராம். க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இணைப்பு https://youtu.be/_fTInyp8nfk

குறுங்கதை 50 ஒரு துளி கண்ணீர்

“சிரமம் வேண்டாம் வெளியிலே சாப்பிட்டுக் கொள்கிறேன்“ என்றான் நாதன். ஆனால் பழனி கேட்கவேயில்லை. “எப்போதும் வெளியே தானே சாப்பிடுகிறீர்கள். இன்றைக்கு என் வீட்டிற்கு மதியம் சாப்பிட வாருங்கள்“ என்றார். எவ்வளவோ மறுத்தும் பழனி கேட்கவில்லை. மதியம் ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக் கொண்டான். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தார்கள். முப்பத்தியெட்டு வயதாகியும் நாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியறை எடுத்துத் தங்கியிருந்தான். பழனி புறநகரில் குடியிருந்தார். தெரிந்தவர் வீட்டில் போய்ச் சாப்பிடுவது கூச்சமானது. எதைச் …

குறுங்கதை 50 ஒரு துளி கண்ணீர் Read More »

குறுங்கதை 49 சாப்ளினின் கண்ணாடி

சார்லி சாப்ளின் ஒரு அதிசயமான கண்ணாடியை வைத்திருந்தார் என்கிறார்கள். சாப்ளினைத் தவிர வேறு யாரும் அந்தக் கண்ணாடியைப் பார்க்க அனுமதிக்கபடவில்லை. இந்த உலகில் ஒரேயொரு மனிதன் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை ஆயிரம் பேர் பார்த்தாலும் கண்ணாடியில் எந்தச் சுவடுமிருப்பதில்லை. சாப்ளின் அந்தக் கண்ணாடியை அவரே உருவாக்கிக் கொண்டார். அவரது படுக்கை அறையில் அந்தக் கண்ணாடி இருந்தது. படப்பிடிப்பிற்குச் செல்லும் முன்பு அதன் முன்னால் வந்து நின்று பார்ப்பார். கண்ணாடி மௌனமாக …

குறுங்கதை 49 சாப்ளினின் கண்ணாடி Read More »

டால்ஸ்டாய் கேட்கிறார்.

மாஸ்கோவில் பிச்சைக்காரர்களைச் சந்திக்காமல் ஒரு தெருவைக் கடந்து செல்ல முடியாது, நகரத்துப் பிச்சைக்காரர்கள் கிராமப்புற பிச்சைக்காரர்களைப் போல இயேசு உருவம் பதித்த துணிப்பை வைத்திருப்பதில்லை. தனது தொப்பியைக் கழற்றி நம்முன்னால் நீட்டி பிச்சை கேட்கிறார்கள். நாம் காசு தரவில்லை என்றால் அலட்சியமாகப் பார்த்தபடியே கடந்து போய்விடுகிறார்கள் என்கிறார் லியோ டால்ஸ்டாய். நாட்டுப்புறத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நகரத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை லியோ டால்ஸ்டாய் விரிவாக எழுதியிருக்கிறார். இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற அவரது …

டால்ஸ்டாய் கேட்கிறார். Read More »

நன்றி

நேற்று எனது பிறந்த நாள். உலகெங்குமிருந்து நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.  பேஸ்புக், டுவிட்டர், மின்னஞ்சல், தொலைபேசி என நீங்கள் தெரிவித்த வாழ்த்துகளே எனது பிறந்தநாளுக்கான உண்மையான பரிசு. நேற்றைய நாளை மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக்கியதற்கு நன்றி. என் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு தீராத நன்றி. ••• 14.4.20

கதையில்லாதவன் கதை

மலையாளக் கவிஞர் எம்.என்.பாலூரின் வாழ்க்கை வரலாற்று நூலான கதை இல்லாதவனின் கதையை வாசித்தேன். வியப்பூட்டும் வாழ்க்கை . இந்நூலைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படித் துவங்கி எங்கே சென்று எப்படி நிலை கொள்ளும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. பாலூரின் வாழ்க்கை அப்படியானதே. ஒரு நாவலுக்கும் சுயசரிதைக்குமான வேறுபாடாக எதை நினைக்கிறீர்கள் என்று கவிஞர் தேவதச்சன் ஒருமுறை என்னிடம் கேட்டார். நாவலில் வரும் கதாபாத்திரங்களின் போக்கினை, விதியை வாசகனால் ஓரளவு ஊகித்து அறிந்துவிட …

கதையில்லாதவன் கதை Read More »

குறுங்கதை 48 அன்னாகரீனினா பொம்மை வாங்குகிறாள்

தனது மகன் செர்யோஷாவின் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க விளையாட்டுப் பொம்மைகளை வாங்க விரும்பினாள் அன்னாகரீனினா. மனிதர்கள் தராத ஏதோவொரு அன்பை, நெருக்கத்தைப் பொம்மைகள் தருகின்றன. அதைச் சிறுவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கணவனையும் மகனையும் விட்டுப் பிரிந்து காதலனுடன் வாழும் அன்னாவிற்கு எந்தப் பொம்மையை வாங்குவது எனத் தெரியவில்லை. மனக்குழப்பம் கொண்டவர்களால் பொம்மைகளைத் தேர்வு செய்ய இயலாது. பொம்மைகள் களங்கமின்மையின் அடையாளம். மௌனத்துணை. பொம்மைகள் வழியாகவே சிறுவர்கள் தங்களைப் பெரியவர்களாக உணருகிறார்கள். அதனால் தான் பொம்மைக்கு ஒரு சிறுமி சோறு ஊட்டுகிறாள். …

குறுங்கதை 48 அன்னாகரீனினா பொம்மை வாங்குகிறாள் Read More »

கண் தெரியாத இசைஞன்

விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய கண்தெரியாத இசைஞன் ரஷ்ய நாவல்களில் குறிப்பிடத்தக்கது. நாவல் ஒரு குழந்தையின் அழுகையொலியில் துவங்குகிறது. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் வசித்து வரும் பணக்கார குடும்பம் ஒன்றில் நள்ளிரவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் மயங்கிய நிலையிலிருக்கிறாள். குழந்தையின் அழுகையொலி கேட்டுக் கண்விழித்து ஏன் இப்படி அழுகிறது எனக்கேட்கிறாள். தாதி பயப்படத் தேவையில்லை என ஆறுதல் சொல்கிறாள். ஆனால் குழந்தையின் அழுகையொலி ஏதோ ஒன்றின் அறிகுறி போலவே இருக்கிறது. குழந்தை வளர ஆரம்பிக்கையில் அதற்குக் …

கண் தெரியாத இசைஞன் Read More »