இந்தவாரக் குறும்படம்
கடலும் கிழவனும் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற கடலும் கிழவனும் நாவல் மிகச்சிறப்பாக அனிமேஷனில் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனை உருவாக்க அலெக்சாண்டியர் பெத்ரோவ் என்ற ஒவியரும் அவரும் மகனும் இரண்டு ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டார்கள், 29000 சித்திரங்களை கையாலே கண்ணாடியில் வரைந்து உருவாக்கியிருக்கிறார்கள், இப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்காக அகாதமி விருது பெற்றிருக்கிறது https://video.google.com/videoplay?docid=-6079824527240248060&hl=en# கவிஞனின் ரத்தம் 1930ம் ஆண்டு பிரபல பிரெஞ்சுக் கவிஞரும் ஒவியருமான ழான் காக்தூ இயக்கிய The Blood of a Poet என்ற திரைப்படம் வெளியானது, …