பாலஸ்தீனப் பயணம்

எனது நண்பரும் தீவிர அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான மதுரையைச் சேர்ந்த அ.முத்துகிருஷ்ணன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார், பாலஸ்தீனத்தின் நெருக்கடிநிலையை உலகின் கவனத்திற்கு எடுத்துரைக்கவும் காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

டிசம்பர் 2 தேதி டெல்லியில் இருந்து கிளம்பும் இந்தப் பயணம் ஜனவரி 4ம் தேதி நிறைவுபெறுகிறது,

தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வாயில் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பின்னர் அங்கிருந்து ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து செல்கிறது பயணக்குழு. இந்த 7 தேசங்களையும் சாலை வழியாகப் பயணித்து கடப்பதும், வழி நெடுகிலும் பல நகரங்களின் பாலஸ்தீன ஆதரவுக் கருத்தரங்குகள், திரைப்படவிழாக்கள் எனப் பெரும் ஏற்பாடுகள் எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகிறது

இந்தப் பயணக்குழுவில் 50 இந்தியர்கள் செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பயணக்குழுவில் செல்லும் ஒரே தமிழர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மட்டுமே. சமீபத்தில் அவர் எழுதிய காசா- அறங்கள் மடிந்த இடம் கட்டுரை குறுப்பிடதக்கது. அவர் தமிழ்ச் சுழலில் தொடர்ந்து காத்திரமாக இயங்கி வருபவர், அரசியல் விழிப்புணர்வுமிக்க நிறைய கட்டுரைகளை எழுதியும் வருபவர். இந்தப் பயணத்தில் அவர் கலந்து கொள்வது பெருமைக்குரிய ஒன்று, அவரை நாம் வாழ்த்தி விடை அனுப்பி வைப்போம்

பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடம் அவர் நன்கொடைகளைத் திரட்டி வருகிறார். இந்த நிதி மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களைச் சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்

A.MUTHUKRISHNAN அவர்களை +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.

••

முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சிறு வேண்டுதல்

 பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது.

கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.

15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது..

எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.

பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடம் நன்கொடைகளை திரட்டி வருகிறோம். இந்த நிதி துயருற்ற மக்களுக்கானது,  மருந்துகள், கட்டுமான பொருட்கள்  என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்

A.MUTHUKRISHNAN  +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.

துயருற்ற மக்கள் மீது நிஜமான அக்கறையும் மனித அவலங்கள் குறித்து மனசாட்சியும் விழிப்புணர்வும் உள்ள அனைவரும் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டுகிறேன்

If you can not express yourself you are already behind bars-   Mbana Kaitak:

Archives
Calendar
November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Subscribe

Enter your email address: