கதைகள் பேசுவோம்

புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன ஆனால் தீவிரமாகப் படிப்பவர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள்,

ஒத்த ரசனையுடையவர்கள், இலக்கியத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளவிரும்புகிறவர்கள், படைப்பிலக்கியத்தில் புதிதாக ஈடுபட விரும்புகிறவர்கள் இவர்கள் ஒன்றிணைந்து உரையாடவும் விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொதுவெளி இல்லாமல் இருக்கிறது என நண்பர்கள் பலரும் என்னிடம் ஆதங்கப்படுகிறார்கள்,

நான் எழுத துவங்கிய காலத்தில் இது போன்ற சந்திப்புகள், இலக்கியக்கூட்டங்கள் நிறைய நடைபெற்றன, முக்கிய எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள், குற்றாலம் கவிதைப்பட்டறை இதன் சிறந்த எடுத்துக்காட்டு

இலக்கியப்பகிர்விற்கான பொதுவெளியை உருவாக்கும் முயற்சியில் கதைகள் பேசுவோம் என்ற இலக்கிய முகாமை தொடர்ச்சியாக வேறுவேறு ஊர்களில் நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறேன்,

இதன் முதன்முயற்சியாக டிஸ்கவரி புக் பேலஸ் உடன் இணைந்து மார்ச் 23ம் தேதி ஞாயிறு, ஒரு நாள் இலக்கிய முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறேன்,

இந்த முகாம் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்திலுள்ள இயற்கையான சூழலில் நடைபெற உள்ளது,

இம் முகாமில் தற்காலச் சிறுகதைப்போக்குகள், உலகின் சிறந்த சிறுகதைகள், கதையெழுதும் கலை, புதிதாக வெளியாகி உள்ள புத்தகங்கள் குறித்த உரைகளும் கலந்துரையாடல்களும் நடைபெற இருக்கின்றன

இந்த நிகழ்வில் நான் தொகுத்த நூறு சிறந்த கதைகள் நூலும் வெளியாக இருக்கிறது

முன்பதிவு செய்து கொள்கிற வாசகர்கள் மட்டுமே  முகாமில் கலந்து கொள்ள முடியும், இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில தினஙகளில் வெளியிடப்படும்.

****

0Shares
0