நிகழ்வுகள்

சத்யஜித் ரே குழந்தைகளுக்காக எழுதிய பெலுடா கதைவரிசைகளின் வெளியீட்டு விழா வருகின்ற நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு  சென்னை  தி.நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் ஹாலில் நடைபெற உள்ளது, பாரதி புத்தகாலயம் இந்த விழாவினை ஏற்பாடு  செய்துள்ளது

அந்த விழாவில் கலந்து கொண்டு பெலுடா கதைகள் பற்றி பேச இருக்கிறேன்

•••

புதிய புத்தகங்கள்

சென்னையில் நான் நிகழ்த்திய ஏழு உலக இலக்கியப்பேருரைகள் புத்தக வடிவம் பெறுகின்றன, எனது உரையுடன் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு  மற்றும் அவர் எழுதிய முக்கிய நூல்கள் குறித்த கட்டுரைகள் யாவும் இணைந்து ஒரு அறிமுக நூலைப் போல இவை  உருவாக்கபட்டுள்ளன, உயிர்மை பதிப்பகம் வெளியிடுகின்ற இந்த நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற உள்ளது,

இடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கபடும்

0Shares
0