விருது வழங்கும் விழா

கோவை புத்தகத் திருவிழா  சார்பில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 20  வெள்ளி மாலை ஆறு மணிக்கு கொடீசியா அரங்கில் நடைபெறவுள்ளது. வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன்

புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 201.

வெள்ளி மாலையில் அங்கே இருப்பேன். விருப்பமானவர்கள் சந்திக்கலாம்.

ஞாயிறு மாலையும் புத்தகக் கண்காட்சி அரங்கில் இருப்பேன்.

ஞாயிறு மாலை (22.07.2018)  கொடீசியா புத்தக கண்காட்சி அரங்கில் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

அதில் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன். எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன்,  பேரா. திலிப்குமார்   கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

0Shares
0