வாழ்த்துகள் லிங்கம்

உலகப் புத்தக தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் வேலூர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறுகிறார்.

இந்த விருதிற்கு முழுத்தகுதி கொண்டவர் லிங்கம். தேர்ந்த இலக்கியப்புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க கூடியவர். அவரது வீடே ஒரு நூலகம் போலதானிருக்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வரும் லிங்கம் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.  அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல்23 மாலை 5 மணிக்கு சென்னை  பெரியார் திடலில்  நடைபெறவுள்ளது.

0Shares
0