மலையாள இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் பற்றிய லிஜின் ஜோஸின் ஆவணப்படம் குறித்து நான் எழுதிய கட்டுரையை நண்பர் ஷாஜி மலையாளத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அது இம்மாத மாத்யமம் இதழில் வெளியாகிறது.
வாட்ஸ்அப் வழியாக அக்கட்டுரையை லிஜின் ஜோஸ் உள்ளிட்ட மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரையும் வாசிக்கச் செய்துள்ளார் ஷாஜி.
இன்னொரு பெரிய சந்தோஷம் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா சென்ற ஷாஜி இக்கட்டுரையை ஜே.ஜி. ஜார்ஜ் அவர்களிடம் வாசித்துக் காட்டியிருக்கிறார். அவரது பாராட்டு எனக்குக் கிடைத்த கௌரவமாகும்.
ஷாஜிக்கு எனது அன்பும் நன்றிகளும்.