காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம்
ஒரு நாளில் இரண்டு பக்கங்கள் எழுதினால் போதும் ஒரு ஆண்டிற்குள் ஒரு நாவலை முடித்துவிடலாம் என்று நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சரமாகோ சொல்கிறார். ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஒரு நாளில் இத்தனை சொற்கள் என்று வார்த்தைகளை எண்ணி எழுதக்கூடியவர்கள். அன்றாடம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு எழுதுவது விருப்பமான வேலையாகிவிடும். ஆனால் புதிதாக எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எழுதுவது என்பது இயலாத ஒன்றே. பெரும்பான்மை நாவலாசிரியர்கள் தனது நாவலுக்கான …