admin

மலைமேல் நெருப்பு

அனிதா தேசாயின் Fire on the mountain நாவலை அசோகமித்ரன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மலைமேல் நெருப்பு சாகித்ய அகாதமி பரிசுபெற்ற நாவல். அசோகமித்ரனின் மொழியாக்கம் வெகுசிறப்பானது. சாகித்ய அகாதமி இந்நாவலை வெளியிட்டுள்ளது. மலைப்பிரதேசமான கசவுலியிலிருந்த கரிக்னானோவில் குடியிருக்கிறாள் நந்தா கவுல். வயதானவள். மேல்தட்டுவர்க்கத்தைச் சேர்ந்தவள். கர்னலின் மனைவி. தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ளது அவளது வீடு. முதுமையைத் தனியே கழிக்கும் அவளுக்கு ஒரு நாள் ஒரு தபால் வந்து சேருகிறது. அதில் அவளது கொள்ளுப் …

மலைமேல் நெருப்பு Read More »

கவிஞர் திருலோக சீதாராம் விழா

ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டுவிழாவை  ஏப்ரல் 1 சனிக்கிழமை மாலையில்  கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். நிகழ்வு நடைபெறுமிடம் : பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி ராமகிருஷ்ணா மடம் சாலை மயிலாப்பூர் நேரம்:  மாலை 6 மணி அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• •••

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான எழுத்தாளர் அசோகமித்ரன் இன்று (23.03.2017 ) காலமானார். சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். கணையாழியில் அவர் ஆசிரியராக இருந்த நாட்களில் நான் எழுதத் துவங்கினேன். எனது முதல்கதையைத் தேர்வு …

அஞ்சலி Read More »

தனுஷ்கோடி

மோவி என்ற மதுரையைச் சேர்ந்த பத்திரிகையாளர்  https://thetimestamil.com இணையத்தில் எழுதியுள்ள குறிப்பிது. ••• மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் திரு ஆத்மனாதன். . சில ஆண்டுகளாக தனுஷ்கோடி பற்றிய தீவிர ஆய்வில் இருந்தார். இன்று தனது ஆய்வுக்கட்டுரையை மதுரை காமராஜர் பல்கலையில் சமர்பித்துள்ளார். அவருடன் உரையாடிய போது •• அன்று அதிகாலை மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பாம்பன் – தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயில் பாம்பன் ரயில் நிறுத்ததில் நின்றுகொண்டிருந்தது. …

தனுஷ்கோடி Read More »

ஐன்ஸ்டீன் கடிதங்கள்

உலககெங்கும் பள்ளி மாணவர்களின் லட்சியமனிதர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் . ஜீனியஸ் என்பதற்கு அடையாளமாக ஐன்ஸ்டீனைத் தான் காட்டுகிறார்கள்.  தீவிர வாசிப்பில் ஈடுபாடு கொண்ட ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை விரும்பிப் படித்தார். அவரது புகழ்பெற்ற மேற்கோள் “Dostoevsky gives me more than any scientist“ ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியைப் புரிந்து கொண்ட விதம் பற்றி ஆராய்கிறது B. G Kuznetsov எழுதிய Einstein and Dostoyevsky புத்தகம் பள்ளி மாணவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதங்களும் அவற்றிற்கு அவர் எழுதிய …

ஐன்ஸ்டீன் கடிதங்கள் Read More »

செங்கல்பட்டில்

மார்ச் 11 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கை பாரதியார் மன்றம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இடம்  : ஹோட்டல் கணேஷ் பவன் செங்கல்பட்டு நாள் : 11.03.2017 மாலை 5 மணி தலைப்பு  :  கற்றுத்தரும் கதைகள்

கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள்

பாரசீகக் கவிஞரான ரூமியின் கவிதைகள் தாகங்கொண்ட மீனொன்று என்ற தலைப்பில் என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. இப்பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் விற்பனைசெய்கிறார்கள். இது சமீபத்தில் படித்த மிக முக்கியமான கவிதைத்தொகுப்பாகும். ரூமியின் சில கவிதைகள் தமிழில் பலராலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் ஒரே தொகுப்பாக, அதுவும் மிக நேர்த்தியாக, ஒவியங்களுடன் துணைக்குறிப்புகளுடன் வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை. அவ்வகையில் இதைச் சாத்தியமாக்கிய என். சத்யமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர்.. கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த (THE …

கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள் Read More »