admin

மலேசியப்பயணம்

மலேசியத் தமிழ் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஆகஸ்ட் 18 முதல் 25 வரை மலேசியா செல்ல இருக்கிறேன், இதில் ஆகஸ்ட் 19, 20 ,21 ஆகிய மூன்று நாட்கள் கோலாலம்பூரில் சிறுகதைப் பயிலரங்கினை ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறேன், மற்ற நாட்களில் மலேசியாவின் பினாங்கு. கெடா. ஈப்போ ஆகிய மூன்று இடங்களில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன, விரிவான நிகழ்ச்சி நிரலை விரைவில் வெளியிடுகிறேன், இந்தப் பயணத்தின் போது மலேசியாவில் உள்ள இலக்கிய வாசகர்கள். ஆர்வலர்களைச் சந்திக்க விரும்புகிறேன், …

மலேசியப்பயணம் Read More »

மரணவீட்டின் குறிப்புகள்

நவீன நாடகப்பயிலரங்காக விளங்கி வரும் தியேட்டர் லேப் நடிகர்களை முறையாகப் பயிற்சி தந்து உருவாக்குவதில் முன்னோடியாக விளங்குகிறது, கூத்துப்பட்டறையில் பயின்ற ஜெயராவ் இதை நடத்துகிறார், அவர் ஒரு சிறந்த நடிகர், நாடக இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர், இவர் இயக்கிய சங்கீத பைத்தியம். மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் போன்றவை சிறப்பான நாடகங்கள். இவரது தியேட்டர் லேப்பின் சார்பில் இரண்டு வருசங்களுக்கு முன்பாக எனது நதி அறியாதது என்ற நாடகம் அலியான்சே பிரான்சேயில் நடைபெற்றது. தற்போது அவர்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் …

மரணவீட்டின் குறிப்புகள் Read More »

ஜாந்திபி

அமெரிக்க மேடைநாடகமான Maxwell Anderson’s Barefoot in Athens யை வாசித்துக் கொண்டிருந்தேன், அதில் சாக்ரடீஸீன் மனைவி ஜாந்திபி (Xanthippe) அவரைப்புரிந்து கொண்ட சரியான வாழ்க்கைத்துணையாகச் சித்தரிக்கப்படுகிறாள், சாக்ரடீஸின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாடகம் தொலைக்காட்சிக்கான படமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது, கிறிஸ்து பிறப்பதற்கு 469 ஆண்டுகளுக்கு முன்னால் கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரத்தில் பிறந்தவர் சாக்ரடீஸ். கல்தச்சரின் மகன், போர்வீரனாக இருந்திருக்கிறார்,  தன் தத்துவங்களையும், சிந்தனைகளையும் சாக்ரடீஸ் தானே எழுதவில்லை. பிளாட்டோவின் மூலமே சாக்ரடீசின் வரலாறு உலகத்திற்கு தெரிய …

ஜாந்திபி Read More »

இரண்டு விழாக்கள்

யாமம் நாவலுக்காக நான் தாகூர் விருது பெற்றதைப் பாராட்டி இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன. ஜுலை 29 வெள்ளி மாலை 5.30 மணிக்கு இராஜபாளையம் அர்ஜுன்மந்திரம் திருமண மண்டபத்தில் நாற்று இலக்கிய அமைப்பு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் யாமம் குறித்த ஆய்வுரையும் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது ஜுலை 31 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் நகர், நூறடி சாலையில் நடைபெற உள்ள கலைஇலக்கிய விழாவில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது, இதனை ஏற்பாடு செய்திருப்பவர்கள், …

இரண்டு விழாக்கள் Read More »

நாகரத்தினம் கிருஷ்ணா

எனது நண்பரும் சிறந்த எழுத்தாளருமான நாகரத்தினம் கிருஷ்ணா, பிரான்சில் வாழ்ந்துவருபவர், சொந்த ஊர் பாண்டிச்சேரி, இவரது  மார்த்தா ஹரி,  நீலக்கடல் போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்கள்,  பிரெஞ்சு எழுத்தாளர்களையும் சமகால பிரெஞ்சு இலக்கியப்போக்குகளையும்  தமிழில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருபவர், இவர் புதிதாக வலைப்பக்கம் ஒன்றினைத் துவக்கியிருக்கிறார், இதில் பிலிப் விலென்(Philippe Vilain) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘Pas son Genre’ (அவனுக்கு உகந்ததல்ல) நாவலைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது. பார்வைக்கு https://nagarathinamkrishna.wordpress.com/mukappu/ **

பத்துவயதின் பாடல்

திங்கள்கிழமை திருடன் வந்தான். செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான். புதன்கிழமை புத்தி வந்தது. வியாழக்கிழமை விடுதலை ஆனான். வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான். சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான். அப்புறம் நடந்தது யாருக்குத் தெரியும்? சிறுவயதில் கேட்ட இந்தப் பாடலை தற்செயலாக ஒரு வாரஇதழில் வாசிக்க நேர்ந்தது, படித்தவுடனே இந்தப் பாடலைப்பாடி எவ்வளவு நாட்களாகிவிட்டது என்று தோன்றியது. என் பள்ளிவயதில் இதைப் பாடிக்கொண்டே இரவில் கிறுகிறுவானம் சுற்றியிருக்கிறேன் , தலைசுற்றியதும் நண்பர்களுடன் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அரைத்திருடன் முக்கால்திருடன், முழுத்திருடன் …

பத்துவயதின் பாடல் Read More »

அது தான் சாப்ளின்

சினிமாவில் மௌனம் என்பதே முற்றிலும் புறக்கணிக்கபட்ட ஒன்றாகிவரும் சூழலில் மொத்தப் படத்தையும் உரையாடல்களின் உதவியில்லாமலே ரசிக்க முடியும் என்ற மௌனப்படக்காலம்  இன்றைய சினிமாப் பார்வையாளனுக்கு வியப்பூட்டும் புதிர், அதிலும் நகைச்சுவை என்றாலே வாய்ஒயாமல் பேசிக் கொண்டேயிருப்பது என்ற சமகாலச் சூழலில் சாப்ளினை நினைவூட்டவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை மறுபடி நினைவுறுத்துவதும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது, சாப்ளின் நடித்த முதல் திரைப்படம் மேக்கிங் எ லிவிங், மௌனப்படமான இதை கீஸ்டோன் ஸ்டுடியோதான் தயாரித்தது.  அப்போது சாப்ளினுக்கு இருபத்திமூன்று …

அது தான் சாப்ளின் Read More »

பீட்டர் புருக் மகாபாரதம்

பீட்டர் புருக் (Peter Brook) ஒன்பது மணிநேர நாடகமாகத் தயாரித்த மகாபாரதம் நான்கு மணி நேரங்களுக்கு ஒடும் திரைப்படமாகவும் வந்திருக்கிறது, நம் மனதில் மரபாகப் பதிந்து போய்விட்ட கிருஷ்ணன் பீஷ்மர் கர்ணன் பாண்டவர்களைப் பற்றிய சித்திரங்களை முழுமையாக மாற்றியமைக்கிறது இந்தப்படம், இதை முழுமையான மகாபாரதம் என்று சொல்லமுடியாது , மாறாக மகாபாரதக் கதையைப் பீட்டர் புருக் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதன் வெளிப்படாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது, இதற்கான திரைக்கதையை எழுதியவர் உலகப்புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் ஜீன் கிளாடே …

பீட்டர் புருக் மகாபாரதம் Read More »

டி.எம்.கிருஷ்ணா

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் உரையைக் கேட்பதற்காக நேற்று மாலை நடைபெற்ற கேணி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன், நான் அதிகம்  இசைகேட்கிறவனில்லை, ஆனால் கிருஷ்ணா பாடிய சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன், தனித்துவமான குரல் அவருடையது,  கிருஷ்ணா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இருவரது கச்சேரியை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட மார்கழி ராகம் என்ற திரைப்படம்  எனக்குப் பிடித்திருந்தது, நேற்று அவர் கர்நாடக இசையை அறிமுகப்படுத்திப் பேசியதும் அதைத் தொடர்ந்த விவாதங்களுக்குப் பதில் அளித்ததும் மிகச்சிறப்பாக இருந்தது, இசை தொடர்பான அவரது ஆழ்ந்து தெளித்த …

டி.எம்.கிருஷ்ணா Read More »

ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கிறது

அகிரா குரசோவாவின் ரோஷாமானை மறுபடியும் நேற்றிரவில் பார்த்தேன், திரைப்பட விழாக்களில், பயிலரங்குகளில், தனிக்காட்சிகளில் என அந்தப்படத்தை இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன், இன்றும் அதன் வசீகரம் குறையாமலே இருக்கிறது. இந்த முறை படம் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் தருவதாக இருந்தது, காட்சிகள், கதை சொல்லும்முறை யாவும் கடந்து போய் படத்தின் ஆதாரத்தொனியாக உள்ள அறத்தைப் பற்றியே மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது, ஒருவகையில் அது அகிரா குரசோவாவின் திரைப்படங்களில் எது முதன்மையாகக் கவனம் கொள்ளப்படுகிறது என்பதை அடையாளம் …

ரோஷாமானில் மழை பெய்து கொண்டிருக்கிறது Read More »