இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில், உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த எனது புதிய நாவல் நிமித்தம் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து அதன் அடுத்தபதிப்பு வெளிவர இருக்கிறது
இது போலவே இலக்கில்லாத பயணி , எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, காந்தியோடு பேசுவேன் ஆகிய நூல்களும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளன.
நான் தொகுத்து, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள நூறு சிறந்த தமிழ்சிறுகதைகளின் தொகைநூல் மிகச் சிறப்பாக விற்பனையாகி வருகிறது,
எனது புத்தகங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
வெளியூர் மற்றும் வெளிநாட்டு வாசகர்களுக்காக எனது நூல்கள் யாவும் டிஸ்கவரி புக் பேலஸ் ஆன்லைன் விற்பனையில் கிடைக்கின்றன.
•••
100 சிறந்த சிறுகதைகள்
தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 1092
விலை: Rs.650.00
••••
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
Ph”+91 44 65157525 , Cell +91 9940446650