எனது கதை ஒன்றினை திரைப்படக்கல்லூரியை சேர்ந்த மாணவர் லோகேஷ் மற்றவள் என்ற குறும்படமாக இயக்கியிருக்கிறார். இந்தக் கதை குறும்படத்திற்காகவே எழுதப்பட்டது. அதன் திரைக்கதை வசனத்தை நானே எழுதியிருக்கிறேன். ஒளிப்பதிவு துறையில் பயின்ற லோகேஷ் இக் குறும்படத்தை மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முரளி மனோகர் இயக்கி எனது கதை வசனத்தில் வெளியான குறும்படமான கர்ணமோட்சம். தேசிய விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளது.
அதன்பாதையில் மற்றவளும் தற்போது சில குறும்பட விழாக்களில் பரிசு பெறத் துவங்கியுள்ளது.
மேலும் பல விருதுகள் பெற லோகேஷை வாழ்த்துகிறேன்.
இந்த குறும்படத்தை காண்பதற்கான இணைப்பு.