தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இயல் இலக்கியச் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
அரங்கு நிரம்பிய கூட்டம். இந்நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன். பிரசன்னா ராமசாமி, விமலாதித்த மாமல்லன், சரவணன் சந்திரன், பேராசிரியர் பஞ்சாங்கம், புதுவை சீனுதமிழ்மணி, பேராசியர் வெங்கடசுப்பராய நாயகர், பாஸ்கர் சக்தி, வேடியப்பன், பிருந்தாசாரதி, ஆடிட்டர் சந்திரசேகர், கி.ராவின் மகன் பிரபி, அவரது மனைவி நாச்சியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்
இயல் சிறப்பு விருதிற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் மற்றும் கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பிற்கும். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய தி இந்து நாளிதழ், ரஹ்மத் அறக்கட்டளை உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றிகள்.
தி இந்து நாளிதழ் ஆசிரியர் அசோகன் மற்றும் செய்தி ஆசிரியர் அரவிந்தன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஆகியோர் இந்நிகழ்வில் காட்டிய அக்கறை மிகுந்த பாராட்டிற்குரியது.
நிகழ்வில் கலந்து கொண்டு பரிசு வழங்கியதுடன் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு விருது வழங்கவுள்ளதாக அறிவித்த முஸ்தபா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
புதுவை இளவேனில் கிராவை நேர்காணல் செய்து குறும்படமாகத் திரையிட்டார். மிக முக்கியமான ஆவணமது. சிறந்த புகைப்படக்கலைஞர் என்பதால் வெகுநேர்த்தியாக அந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இளவேனிலுக்கு எனது பாராட்டுகள்
கிராவோடு பழகிய அனுபவங்களைச் சிறப்பாகப் பகிர்ந்து கொண்டார் கழனியூரான்.
எனது உரையை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பியாக shruti.tv க்கு நன்றி
கி.ரா. படைப்புலகம் – எஸ்.ராமகிருஷ்ணன் பேருரை
https://www.youtube.com/watch?v=O8bEt50uGl4
Thanks
: team shruti.tv