கதைகேளு கதைகேளு

வித்யா சுபாஷ் அமெரிக்காவில் வசிக்கிறார். ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள எனது இடக்கை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை (The Final Solitude ) மிகச்சிறப்பாக திருத்தம் செய்து கொடுத்தவர் வித்யா சுபாஷ்.

சிறந்த இலக்கிய வாசகர். மொழிபெயர்ப்பாளர். இசையில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர்.

அவர்  தனக்குப் பிடித்தமான சிறுகதைகளைத் தன் குரலில் பதிவு செய்து கதைகேளு கதைகேளு என்ற தலைப்பில் You tubeல் வெளியிட்டு வருகிறார்.

அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. நேர்த்தியான கதை சொல்லல். கதையின் உணர்ச்சிகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். வாசிப்பில் தோய்த்து போன ஒருவரால் தான் இப்படிக் கதையை விவரிக்க முடியும்.

வித்யா சுபாஷிற்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இந்தத் தொடரில் ஜெயமோகனின் அறம், சாரு நிவேதிதாவின் த்ரிலோக்புரி கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஜீரோ டிகிரி பதிப்பாளர் ராம்ஜியின் அல்லிகேணி என்ற திருவல்லிகேணி குறித்த நினைவுகளையும் தொடர் உரையாக வழங்கி வருகிறார். ராம்ஜியின் நினைவுகள் திரைப்படம் போல ஒளிருகின்றன. அவருக்கும் எனது வாழ்த்துகள்.

கதைகேளு கதை கேளு இணைப்புகள்

https://youtu.be/8Jq7TyuxgHc

https://youtu.be/Ctfzu8U9LZA

https://youtu.be/dzKj7swJIrI

Narrator – Vidhya Subash

Audio & Visual Credit – Vishwas Subash

•••

0Shares
0