பிறமொழிகளில்.

கதாவிலாசம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகம் இதனை வெளியிட முன்வந்துள்ளது. ஜனவரி 2021ல் இந்நூல் வெளியாகவுள்ளது
••
எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பும் ஜனவரியில் வெளியாகிறது
••
சஞ்சாரம் நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 2021ல் வெளியாகவுள்ளது
••
உப பாண்டவம் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. பிரபல புத்தக நிறுவனம் இதனை வெளியிடுகிறது
••
இடக்கை நாவல் செர்பிய மொழியில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. 2021 ஜூனில் இந்த நாவல் வெளியாகக் கூடும்
••
தெலுங்கில் எனது பதினைந்து சிறுகதைகளின் மொழியாக்கத் தொகுதி 2021ல் வெளியாகிறது
••
யாமம் நாவலின் ஆங்கில மொழியாக்கம் நடந்து வருகிறது. புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகம் இதனை வெளியிட முன்வந்துள்ளது. 2021ல் இந்நாவலும் வெளியாகிறது
••
சஞ்சாரம் நாவலின் மலையாள மொழியாக்கத்தைச் சபி செருமாவில் மேற்கொண்டு வருகிறார். சாகித்திய அகாதமி இதனை வெளியிடவுள்ளது
••
இந்தியாவின் சமகாலச் சிறுகதைகள் ஆங்கிலத் தொகுப்பில் எனது சிறுகதை புறாப்பித்து இடம்பெற்றுள்ளது. இந்த நூல் டிசம்பரில் வெளியாகிறது
••
இடக்கை நாவலின் ஹிந்தி மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்து வருகிறது. 2021ல் இது வெளியாகக்கூடும்
••
0Shares
0