கௌரவ டாக்டர் பட்டம்

தட்சசீலா பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் விழா நவம்பர் 19 காலை சிறப்பாக நடந்தேறியது.

ஐ.நா வாழ்விட அமைப்பின் முன்னாள் செயல் இயக்குநர், கோலாலம்பூர் மேனாள் மேயர் டத்தோஸ்ரீ மைமூனா முகமது ஷெரிப் அவர்கள் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

இந்தியாவிற்கான மியான்மர் குடியரசின் தூதுவர் மேதகு ஊஏ மின் த்வே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதே நிகழ்வில் புகழ்பெற்ற பாடகி, இசைக்குயில் கே.எஸ்.சித்ரா அவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் எனது நண்பர்கள். வாசகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

எனது சகோதர் டாக்டர் வெங்கடாசலம். அவரது துணைவியார் டாக்டர் ஈஸ்வரி. மகள் டாக்டர் தீபா. தம்பி பொறியாளர் ராமலிங்கம், தங்கை கமலா ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசன், ஆடிட்டர் சந்திரசேகர், நூல்வனம் மணிகண்டன், அகரமுதல்வன், நண்பர் பிரபாகர், மயிலாடுதுறை பிரபு, மனோ சாலமன், சரவணன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

சமூக ஊடகங்கள் வழியாக நண்பர்கள் பலரும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நிறைய வாசகர்கள் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்கள். தொலைக்காட்சிச் செய்தியிலும், நாளிதழ் மற்றும் சமூக ஊடகங்களிலும் இதனைத் தெரியப்படுத்தினார்கள். அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி

கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்த தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன் அவர்களுக்கும் பதிவாளர் செந்தில் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்

456
0Shares
0