குறும்பட வெளியீடு

என் மகன் ஹரிபிரசாத் அண்ணா பல்கலைகழகத்தில் மீடியா சயின்ஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறான். எடிட்டிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவன், என்.எப்.டி.சி நடத்திய படத்தொகுப்பிற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறான்.

தற்போது ஹரி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளான். அவனும் நண்பர்களும் இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இக்குறும்படத்தின் வெளியீட்டு விழா  ஜனவரி 3 செவ்வாய்கிழமை மா லை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் வசந்தபாலன், திரு சமஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவில்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

0Shares
0