admin

குறுங்கதை – 27 காதலுற்ற சிற்பங்கள்

ஒன்றையொன்று காதலித்துக் கொள்ளும் இரண்டு சிற்பங்கள் அந்தக் கோவிலிலிருந்தன. ஒரே பிரகாரத்திலிருந்த அந்தச் சிற்பங்கள் கண்மூடாமல் ஒன்றையொன்று பார்த்தபடியே இருந்தன. ரகசியமாகப் பேசிக் கொண்டன வட்டமுகமும், பருத்த உதடுகளும், மாதுளை போன்ற மார்பகங்களும், வெண்கலப் பானையின் கழுத்து போல வளைந்த இடையும், பெரிய தொடைகளும், சிறிய பாதங்களும் கொண்டிருந்த அந்தப் பெண் சிற்பம் கையில் ஏந்திய ஆடியில் முகம் காணுவதை போல நின்றிருந்தது. ஆண் சிற்பமோ கால் உயர்த்தி நின்ற புரவியில், கையில் குத்தீட்டி ஏந்தியபடி வேட்டைக்குச் …

குறுங்கதை – 27 காதலுற்ற சிற்பங்கள் Read More »

குறுங்கதை 26 அன்பின் வெளிச்சம்

கப்பல் முதலாளியைத் தற்செயலாக அவன் பாலக்காடு ரயில் நிலையத்தில் சந்தித்தான். தட்டில் இட்லி பொட்டலம் வைத்து விற்றுக் கொண்டு வந்தார். அவரை இப்படிக் காணுவது அதிர்ச்சியாக இருந்தது. ஆள் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சாந்தமான முகம். பரிசுத்தமான கண்கள். கொக்கின் வெண்மையிலிருந்த தலைமயிர், அடர்ந்த தாடி. ரப்பர் செருப்பு. ஒரு காலத்தில் கப்பல் முதலாளி வருகிறார் என்றால் அவர் போட்டிருக்கும் வாசனைத்திரவியத்தின் மணத்திலே தெரிந்துவிடும். ஆள் நல்ல அழகன். பர்மா சில்க் தான் எப்போதும் அணிவார். கையில் …

குறுங்கதை 26 அன்பின் வெளிச்சம் Read More »

நீரின் நிழல்

சினிமா என்பது முழுமையாகக் காட்சிமொழியின் ஊடகம். நாவலைப் போல அதற்கு நிறையக் கதை தேவையில்லை. கதையின் ஒற்றைப்புள்ளியிலிருந்து அது ஆழத்தை நோக்கியதாக நகர்வு கொண்டுவிடும். மிகச்சிறந்த கலைப்படங்களில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையும் உணர்வுகளும் குறைவான காட்சிகளின் வழியே பார்வையாளனுக்கு முற்றிலும் கடத்தப்பட்டுவிடும். அந்த மாயம் தான் சினிமாவின் தனித்துவம். அப்படி ஒரு படமாகத் தான் சனல்குமார் சசிதரனின் Chola என்ற மலையாளப் படத்தைக் கருதுகிறேன். Chola கேரள அரசின் நான்கு முக்கியத் திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும் இத் …

நீரின் நிழல் Read More »

குறுங்கதை 25 பாவம் மனிதன்.

மலைகள் ஒன்றையொன்று “சகோதரா“ என அழைத்துக் கொண்டன. நீர்வீழ்ச்சி பாறைகளைப் பார்த்து “என் அன்பே“ எனச் செல்லமாகக் கூப்பிட்டது. மரங்களோ சீறிப்பாய்ந்தோடும் ஆற்றினை “நண்பனே“ என்று அழைத்தன. ஆறு தன்னில் நீந்திவிளையாடும் மீன்களை “என் செல்வங்களே“ என்றது. மீன்களோ ஆமைகளைப் பார்த்து “அண்ணா“ என்று அழைத்தன. ஆமைகள் பாதிக் கண்களைத் திறந்தபடியே முதலையைப் “பெரியப்பா சுகம் தானா“ என்று கேட்டன. முதலை கசிந்த கண்களுடன் ஆற்றின் கரையிலிருந்த யானையைப் பார்த்து “சௌக்கியமா மாமா“ என்றது. யானையோ வானில் …

குறுங்கதை 25 பாவம் மனிதன். Read More »

பின்னோக்கிப் பறக்கும் பறவை

ரஷ்யத் திரைப்பட இயக்குநரும் ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்த கலைஞருமான செர்ஜி பராஜனோவ் (Sergei Parajanov) வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்த்தேன். Parajanov படத்தை இயக்கியிருப்பவர் செர்ஜ் அவெடிக்கியன் மற்றும் ஓலெனா ஃபெடிசோவா. Shadows of Forgotten Ancestors, Ashik Kerib,The Color of Pomegranates போன்ற திரைப்படங்களை உருவாக்கியதன் மூலம் பராஜனோவ் உலகச் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநராகக் கொண்டாடப்படுகிறார். பராஜனோவ்வின் வாழ்க்கை மற்றும் அவரது தோற்றம் எப்போது இருவரை நினைவு படுத்தக்கூடியது. ஒன்று இயக்குனர் ஃபெடரிகோ ஃபெலினி. …

பின்னோக்கிப் பறக்கும் பறவை Read More »

குறுங்கதை 24 தபால்காரன்.

தனக்குத் தானே தபால் எழுதிக் கொள்ளும் ஒருவர் இருந்தார். எழுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தனியே வசித்தார். அவரது இருபதிமூன்றாவது வயதில் மனைவி இறந்து போனார். அதன்பிறகு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவு என்று அவரைத் தேடி வர எவருமில்லை. அவருக்குச் சொந்தமாக மலைச்சரிவில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் ஒரு பகுதியில் வீடு அமைத்துக் கொண்டு வீட்டின் பின்னால் காய்கறிகள் விளைவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் இரண்டு பிளம்ஸ் மரங்கள் …

குறுங்கதை 24 தபால்காரன். Read More »

கன்னடத்தில்

THUSHARA  கன்னட மாத இதழில் எனது சிறுகதை காந்தியைச் சுமப்பவர்கள் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் கே நல்லதம்பி. ••• மார்ச்2 2020

குறுங்கதை 23 வீடென்பது

சந்தையில் திரியும் மனிதர்களைப் போலப் புதிய வீடுகள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கின்றன. புதிய வீடுகளுக்குத் தனது பெருமைகளை எவ்வளவு சொல்லியும் நிறைவு வருவதேயில்லை. ஒரு புது வீடு சொன்னது “வீடென்பது ஒரு மலர். அதன் வாசனை வசிப்பவர்களின் இயல்பாலே வெளிப்படுகிறது.“ கொஞ்சம் பழசாக ஆரம்பித்தவுடன் அவை தன்னைப் பிறர் கவனிப்பதில்லை என்று மெலிதாகப் புகார் சொல்ல ஆரம்பிக்கின்றன. இப்போதும் தான் அழகு தான் என்று சுயசமாதானம் செய்து கொள்கின்றன. நடுத்தர வயதுப் பெண் தனது திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதைப் போல ஆதங்கத்துடன், வெட்கத்துடன் நினைவில் ஆழ்ந்து …

குறுங்கதை 23 வீடென்பது Read More »

லண்டனில் காந்தி.

காந்தியின் சுயசரிதையில் உள்ள ஒரு சிறு குறிப்பை வைத்துக் கொண்டு இந்த நாவலை கீத் ஹெல்லர் எழுதியிருக்கிறார். மார்த்தாவும் அவரது கணவர் சாமுவேலும் பிரிட்டனின் ஹெட்ஜ் எண்ட் கிராமப்புறத்தில் தங்கள் முதுமையைக் கழிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு, காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், மார்த்தாவிற்கு மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஹரிலாலிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் காந்தியோடு மார்த்தாவிற்கு இருந்த நீண்ட காலக் கடிதத் தொடர்பு குறித்துத் தான் அறிவேன் என்றும் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …

லண்டனில் காந்தி. Read More »

குறுங்கதை-22 இனிப்புப் பொட்டலம்

ஒரு பொட்டலம் பூந்தி இவ்வளவு வெறுப்பை உருவாக்கிவிடும் என ஒரு போதும் நினைத்ததில்லை. ஆனால் அப்படித்தான் நடந்தது. இன்றைக்கும் எனக்குப் பூந்தி பிடிக்காது. அதற்குக் காரணம் எனது மூத்த அண்ணன் பாபு. நிலத்தரகராக வேலை செய்த என் அப்பா எப்போதும் இரவு பத்து மணிக்கு தான் வீடு திரும்புவார். அவர் வரும் போது தள்ளுவண்டிக்கடையில் ஒரு பொட்டலம் பூந்தி,கொஞ்சம் காரசேவு அல்லது பக்கோடா வாங்கிக் கொண்டு வருவார். நாங்கள் ஐந்து பிள்ளைகள் இருந்த போதும் அப்பா உறங்கிக் …

குறுங்கதை-22 இனிப்புப் பொட்டலம் Read More »