சென்னையும் நானும் 14
சென்னையும் நானும் காணொளித் தொடரின் 14 வது பாகம் வெளியாகியுள்ளது. இணைப்பு: https://youtu.be/-BRutHL5F9Y
சென்னையும் நானும் காணொளித் தொடரின் 14 வது பாகம் வெளியாகியுள்ளது. இணைப்பு: https://youtu.be/-BRutHL5F9Y
அந்த மனிதருக்குக் கூட்டல் கணக்கு சுத்தமாக மறந்து போயிருந்தது. இரண்டும் இரண்டும் நான்கு என்றோ, ஐம்பது ரூபாயும் ஐம்பது ரூபாயும் சேர்ந்தால் நூறு ரூபாய் என்றோ அவரால் கணக்கிட முடியவில்லை. அவரிடமிருந்தது கழித்தல் கணக்கு மட்டுமே. கூட்டலை மறந்துவிட்டால் உலகம் மிகச்சிறியதாகிவிடும். அனுபவங்களும் சுருங்கிவிடும். பொருள்தேடுதல் முக்கியமற்றுப் போய்விடும். புத்தகங்களோ, இசையோ, பயணமோ எதுவும் தேவைப்படாமல் போய்விடும். கூட்டலை மறந்தவன் உதிர்ந்த சிறகைப் போன்றவன் எனப் பலரும் அவரைக் குற்றம் சாட்டினார்கள். வயது ஏற ஏற சந்தோஷங்கள் …
போலீஸ் ஸ்டேஷனுள் ஒரு மஞ்சள் ரோஜாச் செடியை யார் நட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தச் செடியில் நிறைய மஞ்சள் ரோஜாக்கள் பூத்திருந்தன. லாக்கப்பில் எவனோ ஒரு குற்றவாளி அடிவாங்கும் போது ஒரு ரோஜாப்பூ “கொடூரம் “என்றபடியே தலைகவிழ்ந்து கொண்டது. மகளைக் காணாமல் தேடும் தந்தை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்று கண்ணீர் விட்டபோது ரோஜாச் செடி சொன்னது “கண்ணீர் குருதியை விடக் கனமானது.“ சந்தேகத்தின் பேரில் அடித்து இழுத்துவரப்பட்ட இளைஞனின் தாயும் சகோதரிகளும் ஸ்டேஷன் …
பதினாறாம் நூற்றாண்டில் பெர்சியாவில் ஒரு ஞானியிருந்தார். அவன் தன்னைச் சிரிக்கும் நட்சத்திரம் என்று அழைத்துக் கொண்டார். அந்த ஞானி திருமணமானவர். குழந்தைகள் இல்லை. வாசனைத் திரவியம் தயாரிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவரது மனைவிக்கு அவர் ஞானி என்பதிலோ, அவரைத் தேடி பலரும் வந்து அறிவுரை கேட்பதிலோ துளியும் மரியாதை கிடையாது. இருவரும் அடிக்கடி சண்டையிடுவார்கள். அவள் பலத்த கூச்சல் போடுவாள். சண்டையின் உச்சத்தில் ஞானி தன் வீட்டிலிருந்த பானை, சட்டி, கரண்டி, தட்டு, ஸ்பூன், டம்ளர், படுக்கை, …
மலையாள எழுத்தாளர் அசோகன் செருவிலின் புளிநெல்லி ஸ்டேஷன் நூலில் அவரைப் பற்றிய எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் ஷாஜி.
கேரள சாகித்ய அகாதமி மறைந்த கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா குறித்த நினைவுமலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவரைப் பற்றிய எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. ஆற்றூர் ரவி வர்மாவை நான் பலமுறை சந்தித்துப் பழகியிருக்கிறேன். திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்றிருக்கிறேன் எனது கட்டுரையை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலக்காடு தினேஷ் ••
பனிப்பிரதேசமொன்றில் அந்த மேபிள் மரம் ஒற்றையாக நின்று கொண்டிருந்தது. “எனக்கென யாருமில்லை. நான் யாருக்கும் பிரயோசனமாகவும் இல்லை. வாழ்வதே வீண்“ என்று அந்த மரம் சொல்லிக் கொண்டிருந்தது காற்று அம் மரத்தைக் கடக்கும்போது சொன்னது “அப்படி நினைக்காதே. உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது“ இரவில் வான் நிறைந்த நட்சத்திரங்களைக் காணும் போது மேபிள் மரம் சொன்னது. “இத்தனை அழகை நான் கண்ட போதும் அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.“ அப்போதும் காற்றுச் சொன்னது. “அப்படி நினைக்காதே. உன் வாழ்க்கைக்கு …
ஹங்கேரியின் புகழ்பெற்ற எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்.( László Krasznahorkai.) இவரது நாவல்களை ஒப்பற்ற திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பெலா டார் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் எழுதிய Seiobo There Below நாவல் 2015ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் கலைத்திறன் பற்றியது இந்நாவல். பல்வேறு துண்டுகளால் ஒன்றிணைந்த வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இந்நாவலில் ஜப்பானிலுள்ள புத்த கோவில் ஒன்றில் பழங்காலப் புத்தரின் சிலையை எப்படி மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பகுதி …
சென்னையும் நானும் காணொளித் தொடரின் 13 வது பாகம் வெளியாகியுள்ளது இணைப்பு https://youtu.be/0aqcmxqeIeg
ஒன்றையொன்று காதலித்துக் கொள்ளும் இரண்டு சிற்பங்கள் அந்தக் கோவிலிலிருந்தன. ஒரே பிரகாரத்திலிருந்த அந்தச் சிற்பங்கள் கண்மூடாமல் ஒன்றையொன்று பார்த்தபடியே இருந்தன. ரகசியமாகப் பேசிக் கொண்டன வட்டமுகமும், பருத்த உதடுகளும், மாதுளை போன்ற மார்பகங்களும், வெண்கலப் பானையின் கழுத்து போல வளைந்த இடையும், பெரிய தொடைகளும், சிறிய பாதங்களும் கொண்டிருந்த அந்தப் பெண் சிற்பம் கையில் ஏந்திய ஆடியில் முகம் காணுவதை போல நின்றிருந்தது. ஆண் சிற்பமோ கால் உயர்த்தி நின்ற புரவியில், கையில் குத்தீட்டி ஏந்தியபடி வேட்டைக்குச் …